மலேசிய வழக்குரைஞர் மன்றத்துக்கு Union International des Avocats (UIA) என்னும் அனைத்துலக வழக்குரைஞர் சங்கம் சட்ட ஆளுமைக்கான விருதை வழங்கியுள்ளது. இதை மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் ஸ்டீபன் திரு இன்று கோலாலும்பூரில் 2016 அனைத்துலக மலேசிய சட்ட மாநாட்டில் அறிவித்தார்.
யுஐஏ உலகின் பழைமையான வழக்குரைஞர் அமைப்புகளில் ஒன்று என்பதுடன் உலகின் புகழ்பெற்ற அமைப்புமாகும். அந்த அமைப்பு முதல்முறையாக இப்படியொரு விருதை வழங்கியுள்ளது. அதுவும் நம்முடைய வழக்குரைஞர் மன்றத்துக்கு அது வழங்கப்பட்டுள்ளது.
விருதளிக்கப்படும் தகவலைத் தெரிவிக்க யுஐஏ செப்டம்பர் 19-இல் கடிதமொன்றை அனுப்பியிருந்தது. அந்தக் கடிதத்தை திரு மாநாட்டில் வாசித்தார்.
“இந்த விருதை வழங்கியதன் மூலமாக, மலேசிய வழக்குரைஞர் மன்றம் அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே எதிரிடையான சூழலிலும், யுஐஏ ஊக்குவித்தும் பாதுகாத்தும் வரும் வழக்குரைஞர் தொழிலின் உயர் விழுமியங்களைக் கட்டிக்காக்க தொடர்ந்தும் துணிச்சலாகவும் நடத்தும் போராட்டங்களைப் பாராட்டுகிறது, ஊக்குவிக்கிறது”, என்று குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை அவர் வாசித்ததும் மாநாட்டுக்கு வந்திருந்தோர் பலத்த கரவொலி எழுப்பினர்.
யுஐஏ விருதளிக்கப்பட்டதை மலேசிய வழக்குரைஞர் மன்றம் பெரும் கெளரவமாக மதிக்கிறது என்று திரு கூறினார்.
நல்லது.