டிஏபி: சிலாங்கூரில் திடீர் தேர்தல் தேவை; பின்னர் நடத்துவது அறிவுடைமையாகாது

puaதேர்தல்    ஆணையம்    தேர்தல்   தொகுதிகளைச்  சீரமைக்கும்   பணியை  முடிப்பதற்கு   முன்பே    சிலாங்கூரில்   மாநிலத்    தேர்தல்கள்   நடத்தப்பட   வேண்டும்   என்று   டிஏபி   வலியுறுத்துகிறது.

நேற்று   நடைபெற்ற   டிஏபி   அவசரக்  கூட்டத்தில்   அம்முடிவு   எடுக்கப்பட்டதாக   சிலாங்கூர்   டிஏபி    தலைவர்   டோனி  புவா    கூறினார்.

“தெருவில்   போகும்  யாரைக்   கேட்டாலும்   இதைத்தான்   சொல்வார்கள்.

“தேர்தல்  தொகுதி  எல்லைகள்   திருத்தி   அமைக்கப்பட்ட  பிறகு   தேர்தலை    நடத்துவது       முட்டாள்தனம்”,  என  புவா   குறிப்பிட்டார்.

தொகுதி   சீரமைப்புக்குப்   பின்னர்   நடக்கக்கூடியதை  டிஏபி       ஆராய்ந்து  பார்த்து     அதன்   பின்னரே    இப்படி  ஒரு     முடிவுக்கு  வந்ததாக    அவர்   தெரிவித்தார்.

“தொகுதி  சீரமைப்புக்குப்   பின்னர்    வெற்றிபெற  முடியும்   என்று   நாங்கள்  நினைக்கவில்லை,   ஆனால்   அதற்கு  முன்பு     நடத்தப்பட்டால்  வெற்றி   வாய்ப்பு   நிச்சயம்   அதிகம்”,என்றார்.