ஒரே வகைப்பள்ளி, ஜோகூர் சுல்தான் மீண்டும் கூறுகிறார்

 

onestreamjohoresultanஜோகூர்பாருவில் இன்று பின்னேரத்தில் சீன அமைப்புகளின் தலைவர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பில் மலேசியக் கல்வி அமைவுமுறையில் ஒரே வகைப்பள்ளியின் முக்கியத்துவதை ஜோகூர் சுல்தான் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டில் தேசிய ஒற்றுமை இன்னும் முழுமைபெறாமல் இருப்பது பற்றி கருத்துரைத்த சுல்தான் இதற்கு காரணம் பள்ளிகள் இனவாரியாகப் பிரிக்கப்பட்டிருப்பதுதான் என்றார்.

சிறுவர்கள் இளைமையிலேயே ஒன்றுபடுத்தப்பட்ட கல்வி முறையில் கலந்திருக்க வேண்டும் என்றார்.

இது ஒன்றுபட்ட புதிய தலைமுறையினரை உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

சிறுவர்கள் இனவாரியாக அல்லது சமயம் வாரியாக பிரிக்கப்படக் கூடாது என்று கூறிய சுல்தான், பல்லின சமுதாயத்தில் கோட்பாடுகளையும் பண்புகளையும் ஆழமாகப்பதிய வைப்பத்தற்கு இந்த அடிப்படைக் கல்வி மிக அவசியமானது என்றாரவர்.