கோலாலும்பூரில் புதிய வாகன நிறுத்தக் கட்டணங்களைப் பொதுமக்கள் ஆதரிப்பதாகக் கூறுகிறார் மாநகர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அசீஸ்.
பங்சார், தாமான் துன் இஸ்மாயில் குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைத்த பின்னூட்டங்களிலிருந்து அது தெரிய வருவதாக மேயர் குறிப்பிட்டார்.
“பெரும்பாலோர் வாகன நிறுத்தக் கட்டண உயர்வை ஆதரிக்கிறார்கள். பத்திரிகைகள்தான் ஆதரிப்பதில்லை. எதிரணி பற்றி எனக்குத் தெரியாது”, என்றாரவர்.
கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து இப்போது வாகனம் நிறுத்துவதற்கு நிறைய இடம் இருக்கிறது, குறிப்பாக பங்சாரில்.
கட்டண உயர்வை எதிர்த்து எதிரணியினர் டிபிகேஎல்-இடம் மகஜர் கொடுத்தது பற்றிக் கருத்துரைத்தபோது முகம்மட் அமின் இவ்வாறு கூறினார்.

























