அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஷாபி அப்டால் இன்று புத்ரா ஜெயாவில் சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்துக்குச் சென்றார். ஒரு வேளை அவர் புதுக் கட்சி தொடங்குவதற்கு அங்கு சென்றிருக்கக் கூடும்.
சம்பூர்ணா எம்பி, காலை மணி 9.30க்கு ஆர்ஓஎஸ் கட்டிடத்துக்குள் நுழைய காணப்பட்டார். சாபாவில் ஒரு புதுக் கட்சியை அமைக்கப்போவதாக ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளார். அக் கட்சி அமைக்கப்பட்டதும் மிகப் பலர் அதில் உறுப்பினர்களாக சேர்வார்கள் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
ஷாபி அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து அம்னோ சம்பூர்ணாவின் துணைத் தலைவர் ஜாவ்ஜான் சம்பாகொங்கும் மூன்று தொகுதித் தலைவர்களும் 300 கிளைத் தலைவர்களும் அம்னோவிலிருந்து வெளியேறினார்கள்.