முன்னாள் மலாக்கா சிஎம்-முக்கு அபராதம் ரிம1,900 விதிக்கப்பட்டது சரியா?

rahimசமூக  வலைத்தளத்தில்   எதிர்மறையான   கருத்தைப்  பதிவிட்டதற்காக   ஆகக்   கடைசியாக    தண்டிக்கப்பட்டிருப்பவர்   மலாக்காவின்    முன்னாள்   முதலமைச்சர்   ரஹிம்   தம்பி    சிக்.

சிலாங்கூர்  பட்டத்திளவரசர்    தெங்கு    அமிர்   ஷா-வின்   மனம்  புண்படும்  வகையில்    கருத்துரைத்தார்  என   ரஹிம்மீது   குற்றம்   சாட்டப்பட்டது.  அவர்  மறுத்து   எதிர்வாதம்   செய்தார்.  முடிவில்   அவருக்கு  ரிம1,900  அபராதம்   விதிக்கப்பட்டது.

2009-இலிருந்து   இதுவரை   12  பேர்மீது   தொடர்பு,  பல்லூடகச்  சட்டத்தின்கீழ்   வழக்கு  தொடுக்கப்பட்டுள்ளது.  அந்த   12   வழக்குகளில்  மிகவும்   குறைந்த   தண்டனை   விதிக்கப்பட்டது  இந்த   வழக்கில்தான்.  மற்றவர்களுக்கு   ரிம10,000-இலிருந்து  ரிம50,000 வரை   அபராதம்   விதிக்கப்பட்டிருக்கிறது.  ஓராண்டுச்  சிறையும்   விதிக்கப்பட்டது.
நான்கு  மாதங்களுக்கு   முன்பு,   ஜோகூர்  பட்டத்திளவரசர்     துங்கு   இஸ்மாயில்   சுல்தான்    இப்ராகிமை     அவமதித்த  குற்றத்தை   ஒப்புக்கொண்ட     19-வயது     முகம்மட்  அமிருல்    அஸ்வான்  முகம்மட்    ஷக்ரிக்கு    ஓராண்டு   சிறைத்   தண்டனை    விதிக்கப்பட்டது.

அமிருலின்   பெற்றோர்   தண்டனையை      எதிர்த்து   மேல்முறையீடு   செய்ய    அங்கு   அவர்  மூன்றாண்டுகள்   சீர்திருத்தப்  பள்ளிக்கு  அனுப்பப்பட    வேண்டும்   எனத்   தீர்ப்பானது.

இப்படியெல்லாம்    தண்டனை   விதிக்கப்பட்டிருக்கும்போது    ரஹிமுக்கு   மட்டும்    இவ்வளவு   சிறு   தண்டனை   ஏன்   என்று   கேள்வி   எழுகின்றது.