சிலாங்கூரிலும் பகாங்கிலும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு மலேசியரையும் மூன்று வெளிநாட்டவரையும் போலீசார் கைது செய்தனர்.
மலேசியரான முகம்மட் வாண்டி முகம்மட் ஜெடி ஐஎஸ் தொடர்புள்ளவர் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். அவரே ஜூன் மாதம் பூச்சோங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு உத்தரவிட்டவர் என்றும் நம்பப்படுகிறது.
அவர் தம் முகநூல் பக்கத்தில் ஐஎஸ்-ஆதரவு பதிவுகளை வெளியிட்டு வந்திருக்கிறார் என காலிட் கூறினார்.
மற்ற மூவரில் ஒருவர் வங்காளதேசி, இன்னொருவர் நேப்பாளி, மூன்றாமவர் மொரோக்கோ நாட்டவர். ஆகஸ்ட் 2-க்கும் செப்டம்பர் 17-க்குமிடையில் கைது செய்யப்பட்ட அவர்கள் அவரவர் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
“வங்காளதேசி” என்று கூறி துணை பிரதமரை சங்கடப்படுத்தும் அளவுக்கு நமது IGP-க்கு தைரியம் இருக்குதே.