நேற்றைய முக்கிய செய்திகளின் சுருக்கத் தொகுப்பு

exagமுன்னாள்  ஏஜி  மெளனம்  கலைந்தார்

தாம்    சட்டத்றைத்   தலைவர்   பதவியிலிருந்து   நீக்கப்பட்டது   குறித்து    இதுவரை   மெளனம்    காத்து     வந்த   முடிவாக,  அப்துல்  கனி    பட்டேய்ல்    முடிவாக   அது   பற்றிக்     கருத்துரைத்துள்ளார்.  அப்பதவியிலிருப்ப்போரை    நீக்குவது   பிரதமரின்   “விருப்புவெறுப்பை”ப்  பொருத்தது  என்றாரவர்.
இதனிடையே,   முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்,   பிரதமரே  நிதி   அமைச்சராக  இருத்தல்   கூடாது    என்று    இப்போது   தாம்  நம்புவதாகக்  கூறினார்.  அந்தப்  பழக்கத்தை   உண்டாக்கியவரே    அவர்தான்    என்றாலும்,  1எம்டிபி   ஊழலை    அடுத்து   இப்படியொரு   முடிவுக்கு   வந்திருப்பதாக     அவர்   சொன்னார்.

மகாதிரின்   இந்தக்   மனமாற்றத்தைத்    தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   குறை    கூறினார். மகாதிர்   பிளவுபட்ட   நாக்குடன்  மாறிமாறிப்  பேசுகிறார்   என்றவர்    சாடினார்.

அம்னோவிலிருந்து  பிரிந்து   சென்றவர்கள்   அணி  திரள்கின்றனர்

அம்னோவிலிருந்து   பிரிந்து   சென்றவர்கள்  ஒன்றுசேரத்   தொடங்கியுள்ளனர்.  சிலாங்கூர்  அம்னோவின்    110   தலைவர்கள்   பார்டி     பிரிபூமி   பெர்சத்து   மலேசியாவில் (பெர்சத்து)    சேர்ந்திருக்கிறார்கள்.
பெர்சத்து     உதவித்    தலைவர்   முக்ரிஸ்   மகாதிர்,   தம்    கட்சி    ஆட்சிக்கு   வந்தால்   பிரதமர்   பதவி    இரண்டு   தவணைகளுக்கு  மட்டும்தான்  என  வரம்பு  கட்டப்படும்    என்றார்.

அடுத்த   பொதுத்   தேர்தலில்    எதிர்க்கட்சிகள்    ஒன்றிணைந்து   ஒரே  அடையாளச்  சின்னத்தில்    போட்டியிட    வேண்டும்   என்ற   கருத்தையும்    அவர்  முன்வைத்தார்.
சாபாவில்   இன்னும்    பெயரிடப்படாமலிருக்கும்   அம்னோவிலிருந்து     பிரிந்து     சென்றவர்களால்   அமைக்கப்பட்ட   கட்சிக்குப்  பெயரிடும்  முயற்சிகள்  நடப்பதாக    முன்னாள்  அம்னோ   உதவித்    தலைவர்    ஷாபி  அப்டால்    கூறினார்.   சாபாவில்   எத்தனை   கட்சிகள்  வந்தாலும்   அவற்றைச்   சமாளிப்பது    பிஎன்னுக்குப்   பெரிய   விசயமல்ல  என்று    துணைப்    பிரதமர்   அஹமட்  ஜாஹிட்   ஹமிடி    கூறினார்.

பெனாம்பாங்  எம்பி,   பிகேஆரிலிருந்து     விலகி     ஷாபியின்   கட்சியில்       சேர்ந்துள்ளார்.   ஆனால்,  கட்சி  விலக     ரிம5மில்லியன்   கொடுக்கப்பட்டதாகக்  கூறப்படுவதை    அவர்    மறுத்தார்.

பெர்சே,   செஞ்சட்டையினர்    மோதலைத்   தடுக்க   ஐஜிபி   சூளுரை

பெர்சே    தலைவர்     மரியா   சின்  தாக்கப்படுவார்  என  மிரட்டிய   கெராக்கான்   மேரா   தலைவர்   முகம்மட்  அலி   பஹாரோம்     விவகாரத்தில்    தாம்   இரட்டை  நியாயத்தைப்   பின்பற்றுவதாகக்   கூறப்படுவதை  மறுத்த     இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு   பக்கார்,   அவரை   ஏற்கனவே   கைது    செய்து   விட்டது   என்றார்.

மேலும்,  நவம்பர்   19-இல்   நடக்கப்போகும்   பெர்சே   பேரணி  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்   செஞ்சட்டை    இயக்கத்தினருக்குமிடையில்   கைகலப்பு   ஏற்படுவதைத்   தடுக்கப்   போவதாகவும்   காலிட்    சூளுரைத்தார்.

பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்,   தேர்தல்   ஆணையத்தின்    தொகுதிச்   சீரமைப்புத்   திட்டத்தில்    சில  விசயங்களில்  அம்னோ   உள்பட,   பிஎன்னுக்கும்       உடன்பாடு  இல்லை  என்றார்.

மசீச      தலைவர்      லியோ    தியோங்    லாய்,  அடுத்த  மாதம்   நாடாளுமன்றம்   கூடும்போது    அக்கூட்டத்தைல்     பாஸ்   தலைவர்   அப்துல்   ஹாடி     ஆவாங்  தனிநபர்     சட்டவரைவைத்   தாக்கல்   செய்ய   இடமளிக்கக்  கூடாது   என   பிஎன்   உச்சமன்றக்  கூட்டத்தில்   கேட்டுக்கொண்டார்.