தேர்தல் ஆணைய(இசி)த்தின் தொகுதிச் சீரமைப்புத் திட்டம் அமல்படுத்தப்படுமானால் சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார்தான் அம்மாநிலத்தின் அடுத்த மந்திரி புசார் என சிலாங்கூர் வாக்காளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
“சிலாங்கூரில் பிஎன் பொதுமான இடங்களைக் கைப்பற்றும் பட்சத்தில் நோ ஒமார்தான் மந்திரி புசாராவார் என்பது தெளிவு.
“நம் பிள்ளைகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்காத ஒருவரையா சிலாங்கூர் மக்கள் தங்கள் தலைவராக ஏற்கப்போகிறார்கள்?”, என டிஏபி இளைஞர் பிரச்சாரச் செயலாளர் முகம்மட் ஷாகிர் அமீர் வினவினார்.
அமைச்சர் நோ, பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் அவற்றின் பள்ளிகளுக்குத் தேவையான நிதியைச் சுயமாக தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறியதை அடிப்படையாக வைத்துதான் அவர் இவ்வாறு வினவினார்.
“சிலாங்கூர் மக்கள், இதயமற்ற ஒருவரைக் கண்டிப்பாக விரும்ப மாட்டார்கள்”, என்றாரவர்.
அதற்க்கு தானே இவ்வளவும்– இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாமே தெரிந்துதான் நடக்கிறது–யார் கேட்டு என்ன செய்ய முடியும்?