டிஏபி 50ஆம் ஆண்டு நிறைவு விருந்துபசரிப்பில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களும் ஆதரவாளர்களும் தலைமைச் செயலாளர் லிம்-முக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.
நேற்றிரவு பாயான் பாரு ஸ்பைஸ் அரினா-வில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டார்கள்.
அதில் ரிம12,144.30 நன்கொடையும் திரட்டப்பட்டது.
விருந்து முடிவில் லிம்முக்கு ஆதரவைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில் அவரின் ஆதரவாளர்கள் பதாதைகளை ஏந்தி “Lawan Tetap Lawan (போராடுவோம், போராடுவோம், இறுதிவரை போராடுவோம்” என்றும் முழக்கமிட்டனர்.
லிம் கட்சிக்கும் தமக்கும் உறுதுணையாக நிற்கும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை, kami tak makan wang(நாம் பணத்தைக் கையாட மாட்டோம்) என்ற நம்பிக்கை மனத்தைத் தொட்டு விட்டது.
“கைச் சுத்தமானவர்கள் என்றும் கைச்சுத்தமானவர்களாகவே இருப்போம் என்றும் நீங்கள் கொண்டுள்ள அந்த நம்பிக்கைக்கு நன்றி”, என்றார் லிம்.
லிம் பதவியைப் பயன்படுத்தி அதிகாரமீறலில் ஈடுபட்டதாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம் ஏசிசி) தொடுத்துள்ள வழக்கு செப்டம்பர் 30-இல் விசாரணைக்கு வருகிறது.
நான் நம்புகிறேன்– ஒரு மலாய் பெண்ணுக்காக ஓர் ஆண்டு சிறை வாசம் செய்தவர் நீங்கள்– ஊழலுக்கு பேர் போனது அம்னோ நாதாரிகள்- அத்துடன் நீதிக்கும் நியாயத்திற்கும் இந்த நாதாரிகளுக்கு வெகு தூரம்.
டிஏபி மேல் கொஞ்சம் காட்டம் இருந்தாலும் நீர் கை சுத்தமானவர் என்பதை நான் நம்புகிறேன். கை சுத்தம் என்பது சாதாரணமான விஷயம் அல்லவே!