அண்மையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தேர்தல் தொகுதிச் சீரமைப்பு நடவடிக்கை மலாய் வேட்பாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளை அதிகமாக உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று பலரும் கவலை தெரிவித்தார்கள்.
ஆனால், பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லிக்கு அந்தக் கவலை இல்லை.
“மலாய்க்காரர்களை ஒன்று சேர்ப்பதன் மூலமாகவும் சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளிலிருந்து மலாய்க்காரர்- அல்லாதாரை வெளியேற்றுவதன் மூலமாகவும் மலாய்ப் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக முடியும் என்று அம்னோ நினைத்தால் பிரதமர் நஜிப் ரசாக் தவறு செய்கிறார் என்பேன்”, என ரபிசி நேற்றிரவு பினாங்கில் டிஏபி 50ஆம் ஆண்டு நிறைவுவிழா விருந்தில் கலந்துகொண்டபோது கூறினார்.
“யார் சொன்னது மலாய்க்காரர்கள் நஜிப்பையும் அம்னோவையும் ஆதரிப்பதாக? கடந்த சில மாதங்களில், நஜிப்பையோ அம்னோவையோ ஆதரிக்கும் ஒரு மலாய்க்காரரைக் கூட நான் சந்திக்கவில்லை”, என்றார்.
“மலாய்க்காரர்களில் பெரும்பாலோர் நஜிப்பை நம்பவில்லை. அவர்கள் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுவதைக் காண விரும்புகிறார்கள்”, என்று ரபிசி வலியுறுத்தினார்.