அபு சாயாவ் கடத்தல்காரர்கள் ஜூலை 18-இல் அபு சாயாவ் ஜோலோ தீவிலிருந்து கடத்திச் சென்ற ஐந்து மலேசியர்களில் ஒருவரை இன்று த ஸ்டார் நாளேட்டுடன் பேச அனுமதித்தனர்.
அதை ஒரு சிறப்புச் செய்தியாக த ஸ்டார் வெளியிட்டிருந்தது.
அபு சாயாவ் பேச்சாளர் அபு ரமி, அந்த நாளேட்டை அழைத்து பினையாளிகளில் ஒருவரான முகம்மட் ரிட்சுவானுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்ததாக அது கூறிற்று.
ரிட்சுவான் ஒன்பது நிமிடங்களுக்கு ஸ்டாரிடம் பேசினார். பிணையாளிகளைக் கடத்தல்காரர்கள் மிகவும் துன்புறுத்துவதாக தெரிவித்தார்.
“இனியும் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. வலியால் நொந்து போயுள்ளோம். எல்லாருக்குமே முடியவில்லை.
“எல்லாருக்கும் உடம்பெங்கும் வெட்டுக் காயங்கள். பலவீனமாக இருக்கிறோம். உண்பதற்கு உணவில்லை. அதற்கும் மேலே அடியும் உதையும்தான்.
“எங்களைச் சுட்டுக்கொல்ல விரும்புகிறார்கள். தயவு செய்து உதவுங்கள்”, என்றவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
“விரைந்து உதவுமாறு அரசாங்கத்தையும் என் முதலாளியையும் கேட்டுக்கொள்கிறேன்.
“ஜோலோ தீவில் தவியாய் தவிக்கிறோம்”, என்றாரவர்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக த ஸ்டாரைத் தொடர்புகொண்ட அபு ரமி மலேசியர்களை விடுவிக்க 100 மில்லியன் பெசோ (ரிம8.5 மில்லியன்) கொடுக்கப்பட வேண்டும் என்று கோரினார்.
நமது நாட்டு பேரம் பேசும் வியாபாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பார்களே. ஒருவேளை தங்களுக்கான பேரத்தில் இழுபறி நிலை நீடிப்பதால் காலம் தாழ்த்துகிறார்கள் போலும்.
lanjam vaangiye sivanthu pona kaigal namathu arasaangam. ippothu matravargal athai ketkiraargal, kodukkumaa?
எவ்வித பணத்தையும் இந்த அபு சயப்பிடம் கொடுக்கக் கூடாது. பின்னர் இதனையே தொழிலாக கொண்டு செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள் இந்த தீவிரவாதிகள். பரவாயில்லை ஓரிருவரை தியாகம் செய்வோம். கடத்தப்பட்டவர்கள் அனுவாரோ, நஜிப்போ அல்ல.