சிலாங்கூரைத் தொல்லைக்குள்ளாக்கியுள்ள நீர் விநியோகத் தடையை வைத்து அரசியல் ஆட வேண்டாம் என அமைச்சர் நோ ஒமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி நோ ஒமார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியை மட்டம் தட்டவும் சுய அரசியல் ஆதாயம் தேடவும் முனைந்துள்ளார் என டமன்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ இன் குற்றம் சாட்டினார்.
அஸ்மினின் கவனமெல்லாம் அரசியலில்தான்; மாநிலத்தின் நீர் பிரச்னையைக் கவனிக்க அவருக்கு நேரமில்லை என்று நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் நேற்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாக இயோ இவ்வாறு தெரிவித்தார்.
ஆற்று நீரின் தரத்தைக் கண்காணிப்பது கூட்டரசு அரசாங்கத்தின் சுற்றுப்புறத் துறை மற்றும் சிலாங்கூர் மாநில நீர் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் பொறுப்பாகும் என்பதை இயோ நோவுக்கு நினைவுபடுத்தினார்.
பி..என். ஆட்சி காலத்தில் சிலாங்கூரில் த்ண்ணீர் பஞ்சமே இல்லாமல் இருந்ததா..? என்னடா வேடிக்கையாக இருக்கிறது.