பினாங்கு மாநிலத்தில் தயாரிப்புத் துறையில் மேலும் சுமார் 200 பேர் விரைவில் வேலை இழப்பர்.
டெக் செங் ஹோல்டிங்ஸ் துணை நிறுவனமான டிஎஸ் சோலார்டெக் சென். பெர்ஹாட் நாளை அதன் பணியாளர்களில் பலர் வேலை இழக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக பிசினஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.
தேவைக்குமேல் பணியாளர்கள் இருப்பதால் ஆள்குறைப்பு செய்ய வேண்டியிருப்பதாக அந்நிறுவனம் அதன் பணியாளர்களுக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில் கூறியது.
இதற்குமுன், அமெரிக்க நிறுவனமான ரூபிகோன் டெக்னோலோஜி பினாங்கில் உள்ள அதன் ரூபிகோன் செப்பையர் டெக்னோலோஜி ஆலையை மூடப் போவதாக அறிவித்திருந்தது. அது மூடப்படுவதால் 180 பேர் பாதிக்கப்படுவார்கள்.
இன்னொரு அமெரிக்க நிறுவனனான சீகேட் டெக்னோலோஜியில் சுமார் 3,000 மலேசியர்கள் வேலை செய்கிறார்கள். அதுவும் வெஸ்டர்ன் டிஜிடல் நிறுவனமும் அவற்றின் தொழில்களை தாய்லாந்துக்குக் கொண்டு செல்கின்றன.
வெஸ்டர்ன் டிஜிட்டலில் 400 மலேசியரும் 800 வெளிநாட்டவரும் வேலை இழப்பர் என பிசினஸ் டைம்ஸ் கூறிற்று.
பினாங்கிலும் கெடா, கூலிமிலும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இண்டெல் டெக்னோலோஜி உலக அளவில் அதன் வேலையாள்களில் 12,000 பேரைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதில் மலேசியாவில் சுமார் 1,000 பேர் வேலை இழக்கலாம்.