பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். அவ்வரியால் சில தொழில்கள் ஆதாயம் காண முடியாமல் போனது என்றாரவர்.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 2017 பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது தம் பொருளாதாரக் கொள்கை தோற்றுப்போனதை ஒப்புக்கொண்டு ஜிஎஸ்டி-யை அகற்ற வேண்டும். அப்போதுதான் பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெறும் சம்பாதிப்பவர் கைகளில் பணம்காசு புரளும்.
“பொருளாதார நிலவரம் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. சில தொழில்கள் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எந்த ஆதாயமும் காணவில்லை எனக் குறைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாதச் சம்பளம் பெறுவோரிடம் செலவுகளைச் சரிக்கட்ட போதுமான பணம் இல்லை”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
நிலைமை இப்படியிருக்க அரசாங்கம் மட்டும் “நெருப்புக் கோழி போல் தலையை மணலுக்குள் புதைத்துக் கொண்டு” இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் நான்கு விழுக்காடு வளர்ச்சி விகிதத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறது என்றாரவர்.
இந்த வளர்ச்சியால் தொழில்களோ சராசரி மலேசியரோ நன்மை அடையவில்லை என்பதை ஆகக் கடைசி ஜிஎஸ்டி புள்ளிவிவரம் காண்பிக்கிறது என லிம் கூறினார். இரண்டாம் காலாண்டில் ஜிஎஸ்டி வசூலில் 30 விழுக்காடு குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல் குறைந்தது விற்பனை அளவும் பயனீட்டாளர்கள் செலவழிப்பதும் குறைந்திருப்பதைக் காட்டுகிறது என்றாரவர்.
இவன் தேங்காய், திருட்டு பயல்., இப்பொழுது அரசாங்கத்திடம் பணமில்லை. அது பல ஆயிரம் கோடிகளை வரியாக நாட்டு மக்களிடம் இருந்து ஜி. எஸ் டி மூலம் பெருகிறது. சில நிறுவனங்கள் ஜிஎஸ். டி செலுத்துவதால் இலாபம் இல்லையா. அதாவது 6 சதவீத லாபம் கூட இல்லா விட்டால் ஏன் தொழில் நடத்துனும்? அரசாங்கம் இன்றைய அதன் பொருளாதார நிலைக்கு ஜி. எஸ் டி யை அகற்றினால், மக்கள் மீது கடுமையான புது வரிகளை விதிக்க வேண்டும். அல்லது மக்களுக்கான சில அடிப்படை சேவைகளை மீட்டுக்கொள்ளும் என்பதனை இந்த தேங்காய் முதல் அமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டில் இதுவரை விதிக்கப்பட்ட வரி முறைகளில் மிக சிறந்தது ஜி. எஸ் டி யே ஆகும். உங்கள் வருமான வரியை கூட கட்டாமல், பள்ளிக்கூடம் , ஷாக்காட் மற்றும் நிதி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற ஸ்தாபனங்களுக்கு அளித்து விட்டு ஏமாற்றலாம். அவர்களும் இனம் , மதம், வசூல் பார்த்து மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடு வார்கள். ஆனால் ஜி.எஸ் டி எல்லாவற்றுக்கும் அப்பால் பட்டது