வாக்காளராக பதிய பணம் கொடுப்பது பரிதாபகரமானது என்கிறது பெர்சே; அது புதுமையானது என்கிறது அமனா

mariaபணம்   கொடுத்து   வாக்காளர்களாக  பதிவுசெய்ய   ஊக்கமளிப்பது        நாட்டின்  “பரிதாபத்துக்குரிய  நிலையை”ப்  பிரதிபலிப்பதாக   பெர்சே   தலைவர்    மரியா  சின்   அப்துல்லா   வருணித்தார்.

“வாக்காளர்களாக  பதிவு   செய்து  கொள்வதை   ஊக்குவிக்கிறோம்.  ஆனால் ,  அதற்காக    பணம்   கொடுப்பதோ    போட்டி  வைப்பதோ      சரியல்ல.

“அது  (பணம்  கொடுப்பது)  பரிதாபகரமானது”,  என  பெட்டாலிங்   ஜெயாவில்   செய்தியாளர்களிடம்   பேசியபோது   மரியா   கூறினார்.

பிகேஆர்-  தொடர்புடைய   ஒரு   என்ஜிஓ   இன்னும்   வாக்காளர்களாக   பதிவு   செய்து  கொள்ளாமலிருக்கும்   சுமார்   4 மில்லியன்  இளைஞர்களை  ஊக்குவிக்க    வாரந்தோறும்   ரொக்கப்    பரிசுகள்   வழங்க   முன்வந்திருப்பது   பற்றிக்  கருத்துரைத்தபோது   மரியா   இவ்வாறு   கூறினார்.

ஆனால்,  பார்டி   அமனா  நெகரா(அமனா)   கட்சியின்   தொடர்பு   இயக்குனர்   காலிட்   சமட்   அந்த  முன்னெடுப்பை    வரவேற்கிறார்.  இளைஞர்களை   வாக்காளர்களாக்க    அது   அவசியம்    என்றார்.

“இது  ஓர்   ஆக்கப்பூர்வமான   முயற்சி.  அதற்கு   எதிராக   கேள்வி   எழுப்பக்   கூடாது”,  என்றாரவர்.