பிரதமருக்கான பக்கத்தான் ஹராபானின் வேட்பாளர் அன்வார் இப்ராகிம்தான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்கிறார் டிஏபி பிரச்சாரப் பகுதித் தலைவர் டோனி புவா.
ஹராபானின் புதிய தோழமைக் கட்சியான பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) ஆலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் பிரதமராவதற்கு நிறைய வாய்ப்பிருப்பதாகக் கூறியதை அடுத்து புவா இப்படி அறிவித்தார்.
அன்வார் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை அனுபவிப்பதால் அது சாத்தியமா என்று வினவியதற்கு, “அதைப் பற்றி பிறகு கவலைப்படலாம்”, என்றார் புவா.
எதிர் கட்சிகளுக்கு இப்போதிருக்கும் 87 நாடாளுமன்ற இடங்களை காட்டிலும் அடுத்த முறை இன்னும் குறைவான நாற்காலிகள் கிடைக்கும். என் கணக்குப்படி 45 இடங்கள் கிடைக்கும். நஜிப்பின் பாரிசான் கூட்டணிக்கு 150 முதல் 170 வரை கிடைக்கும். இதற்கு காரணம் நஜிப்பின் அரசியல் விளையாட்டு ஒரு புறமிருக்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு சிலரை தவிர பெரும்பாலோர் எதற்குமே லாயக்கில்லாத ஊளை தேங்காய்கள். இந்த லட்சணத்தில் யார் பிரதமராவது என்கிற கணக்கு வேறு.
வாழ்துக்கள்
அமாம் அனுவர்தான் அடுத்த பிரதமர்
முஹைதீனை நம்ப முடியாது– இவனும் நம்பிக்கை நாயகனைப்போல் தில்லு முள்ளு காரன்.
திரு. சிங்கம் சபாஷ்.