ஊழல் நிரம்பிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆளும் கட்சியிலிருந்து அதிகமான உறுப்பினர்கள் வெளியேறி வருவதால் ஆண்டு இறுதிக்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி அமைக்க முடியும் என முகைதின் யாசின் நம்புகிறார்.
புதிய கூட்டணி, பில்லியன் -டாலர் ஊழல் புரிந்துவிட்டு என்னதான் நெருக்குதல் கொடுத்தாலும் பதவியைவிட்டு அகல மறுக்கும் நஜிப்பைப் பதவி இறக்கவும் அம்னோ தலைமையில் செயல்படும் ஆளும் கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றவும் முழுமூச்சாக பாடுபடும்.
“அம்னோவுக்கு ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது. அது அடுத்த தேர்தல் வரை நிலைத்திருக்குமா என்றுகூட பலர் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர்”, என முகைதின் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறினார். முகைதின் ஏற்கனவே துணைப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் அவர் பிரதமராக வாய்ப்பு உள்ளது.
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலை 2018 இறுதியில்தான் நடத்த வேண்டும். அது முன்கூட்டியே நடத்தப்படாது என்பதை நஜிப்பும் பெர்லினில் செய்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
கூடடணி வெற்றி பெறலாம். அதனால் தமிழர்க்கு என்ன பலன்? திரும்பவும் உங்களிடம் கையேந்தனும் …. உங்க கனவு பிரதமர் ஆவது .. அதனால் எங்களுக்கு ஒரு பலனும் இல்லை ..
யார் வந்தாலும் எங்களுக்கு ஒரு பலனும் இல்லைதான். ஆனால் அம்னோ ஆட்சி இனி வேண்டாம்.