பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மூன்று ஆண்டுகளுக்குமுன் ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரை தேச நிந்தனைக் கருத்துகளைக் கொண்டது என கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
தியான் சுவா பயன்படுத்திய சொல்கள் தேச நிந்தனைச் சட்டம் பகுதி4(1) (பி)-இன்படி நிந்தனைக்குரியவை என நீதிபதி சுல்கர்னைன் ஹசான் கூறினார்.
கருத்தரங்கில், தியான் சுவா ‘bangkit’ (திரண்டு எழுக) ‘turun ke jalan raya’ (தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்வீர்) என்ற சொல்களைப் பயன்படுத்தியதை நீதிபதி சுட்டிக்காட்டினார். அவை தேச நிந்தனை நோக்கம் கொண்டவை என்றாரவர்.
அக்குற்றச்சாட்டுக்கு அவருக்கு கூடினபட்சம் ரிம5,000 அபராதம் அல்லது மூன்றாண்டுச் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தியான் சுவாவுக்கு ரிம2,000 அபராதம் அல்லது ஓராண்டுக்குமேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவர் எம்பி பதவியை இழக்க நேரும். அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.
“bangkit’ (திரண்டு எழுக) ‘turun ke jalan raya’ (தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்வீர்)”.
இது தேச நிந்தனையா? இது ரொம்பவும் சுதந்திரமான நாடு!
பங்கிட எழு ..எழுக என்பதில் வித்தியாசம் உண்டு! துருன் கே ஜலான் ராய …ரோட்டில் இறங்குக என்பதற்கும் ஆர்ப்பாட்டம் என்ற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் ? நீதிபதிகள் மலாய் சொற்களுக்கு ICJ வில் மொழியாக திறனாய்வுக்கு போகணும். எதிர் தரப்பு வக்கீல் இதை விளக்க வில்லையா ? வார்த்தை சூழ்நிலை நிராதிபதிகள் கைதிகள் அல்ல! “புத்த உறுப்” நேரிடை மொழியாக்கம் எழுத்து குருடன் போல “அயாட் புத்த” வேண்டும்.
அம்னோ சப்பிகளிடம் இருந்து என்ன நீதி கிடைக்கும்? உயர்நீதிமன்ற நீதிபதியாக இதெல்லாம் ஆரம்பம்.