மலேசியா மேல்படிப்புக்காக மேலும் அதிகமான மாணவர்களை ஜெர்மனிக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
இப்போதைக்கு 634 பதிவுபெற்ற மலேசிய மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி பயின்று வருகின்றனர்.
“ஜெர்மனியில் டியுஷன் கட்டணம் இலவசம் என்று அறிகிறேன். மொழி ஒன்றுதான் பிரச்னை. மாணவர்கள் ஜெர்மன் மொழியில் புலமை பெற்றவர்களாக இருந்தால் அவர்களை ஜெர்மனிக்கு அனுப்புவது சாத்தியமே.
“வருங்காலத்தில் மாணவர்கள் சிலரை ஜெர்மனிக்கு அனுப்பும் வாய்ப்புகளை ஆராய்வேன்”. பெர்லினில் மலேசிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசரிப்பில் கலந்துகொண்டபோது நஜிப் இவ்வாறு தெரிவித்தார்.