ஜெட் இயந்திரக் களவு, பணச்சலவை குற்றச்சாட்டுகளிலிருந்து இருவர் விடுதலை

dharmaஅரச    மலேசிய     ஆகாயப்  படையின்    சார்ஜெண்ட்    ஒருவரையும்   ஒரு  வணிகரையும்    ஆகாயப்  படையின்   ஜெட்  விமான  இயந்திரங்கள்   களவிலும்   பணச்  சலவை   நடவடிக்கைகளிலும்   ஈடுபட்டதாகச்   சுமத்தப்பட்டிருந்த   குற்றச்சாட்டுகளிலிருந்து    புத்ரா  ஜெயா  செஷன்ஸ்  நீதிமன்றம்  இன்று  விடுவித்தது.

என். தர்மேந்திரன்,  கே. இராஜேந்திரன்  ஆகியோருக்கு  எதிரான  குற்றச்சாட்டுகளை  அரசுத்  தரப்பு  நிரூபிக்கத்   தவறிவிட்டது   என்று  நீதிபதி    அஸ்லாம்  சைனுடின்  தீர்ப்பளித்தார்.

எதிர்வாதத்துக்கு  அழைக்கப்படாமலேயே   அவ்விருவரும்   விடுவிக்கப்பட்டனர்.

தர்மேந்திரன், 48,    சுங்கை    பீசியில்   ஆகாயப்படை   முகாமிலிருந்து  ஜே8521-ரக   இயந்திரங்களைத்   திருடுவதற்கு    உயர்   அதிகாரி  முகம்மட்   சுக்ரி   முகம்மட்  யுசுப்புடன்   சேர்ந்து   திட்டமிட்டார்   என்று   குற்றம்  சாட்டப்பட்டிருந்தது.  2007-இல்     அவர்  குற்றத்தைப்  புரிந்தார்  என்று  கூறப்பட்டது.

இராஜேந்திரன்   அவ்வியந்திரங்களை  விற்பதற்கு    உதவினாராம்.