பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் எதிராளிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அவரின் பரம வைரியான டாக்டர் மகாதிர் முகம்மட் ஜனநாயகத்தின் எதிரி நஜிப்தான் என்று சாடியுள்ளார்.
“நஜிப் அவரது அரசாங்கம் ஜனநாயக முறையில் அமைந்தது என்றும் அதை அகற்ற நினைப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் கூறிக்கொள்கிறார். இது அடிப்படையற்றது, நகைப்புக்குரியது.
“தோற்றுப்போன, திருப்திகரமாக செயல்படாத அல்லது நாட்டுக்குத் தீங்கிழைத்த தலைவர்கள் அகற்றப்படுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறைதான்”, என மகாதிர் தம் வலைப்பதிவில் கூறினார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிசேசில் முதலிய நாடுகளில் தலைவர்கள் பதவிக்காலம் முடியும் முன்னரே விலகிக் கொண்டிருக்கிறார்கள், அகற்றப்பட்டிருக்கிறார்கள் என முன்னாள் பிரதமர் கூறினார்.
“நஜிப்பும் இப்போது ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்”, என்று மகாதிர் குறிப்பிட்டார்.
அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்தார். இப்போது அதிகாரப் பகிர்வு என்பது இல்லை. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை மூன்றும் நஜிப்பின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எம்பிகள் பிரதமரின் விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்
இதனால் நாடாளுமன்றத்தில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவதில்லை.
அரசாங்க அதிகாரிகள், போலீஸ், இராணுவம், வணிகர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருமே நஜிப் சொல்படி நடக்க வேண்டியவர்களாக உள்ளனர். மறுத்தால் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும்.
“இவையெல்லாம் நஜிப் நாட்டில் ஜனநாயகத்தை அழித்து விட்டார் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றன”, என்றார்.
“இப்போது அதிகாரப் பகிர்வு என்பது இல்லை. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை மூன்றும் நஜிப்பின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எம்பிகள் பிரதமரின் விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்”
இவ்வளவும் மாமக்தீர் ஆட்சியிலும் இருந்தது. இவர் முகத்தை கண்ணாடியில் பார்க்காமல் பிறர் முதுகை பார்ப்பது வேடிக்கை.
சரி இதற்காக நஜீபை யோக்கியமானவர் என்று பொருள் படுமோ?
மாமா மகாதீரே ! நீங்கள் விதைத்ததை நீங்களே அறுவடை செய்யும் நிர்பந்தமான சூழ்நிலை ஏற்படும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள்.
மாமா மகாதீர் அறுவடை செய்ய அருவாளை நீட்டினால்
1MDB (1 MALAYSIA DALAM BAHAYA) என நினைத்து பதிலுக்கு
பூகிஸ் நஜிப் சுத்தியலை நீட்டுவார்.
இதை பார்க்கும் மக்களுக்கு கம்யூனிஸ்டு சின்னம் ஞாபகம் வருகிறதோ இல்லையோ இந்நாட்டை கம்யூனிஸ்டு ஆண்டிருந்தால் இன்னும் வளமாக இருந்திருக்கும் என்று நினைக்க தோன்றும்.
அடேய் நீங்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?
நீ மட்டும் என்னவாம்? வெங்காயம்!
நாளைக்கே மகனுக்கு மந்திரி பதவி என்றால் , நஜிப்புடன் சேர்ந்து விடுவார் மகாதீர் ! அணுவாரை சிறைக்கு அனுப்பிய மகாதீர் இன்று அவருடன் கை குலுக்க வில்லையா ! பூமி அரசியல் நமக்கு வேண்டாம் இவர்கள் பிரச்னை ! தமிழன் உருப்பட வழி ஏதும் இருக்கிறதா என்று பார்ப்போம் !!
இதற்கு ஒரே தீர்வு pakatan rakyat நாட்டை ஆள்வதே. மறந்தும் பாரிசனுக்கு ஒட்டு போடாமல் இருந்தால் சரி.
இங்கே எழுதியவை அனைத்தும் காக்க வுக்கு தெரியாமல் இல்லை . கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்பதில் உறுதியா இருக்கான் இந்த அரசியல் விளையாட்டு மன்னன் ..
முன்னால் பிரதமர் அப்படி ஒன்றும் நல்லவர் இல்லைதான். ஆனால் அப்போது அதிக வரி பணம் இல்லை( ஜி.எஸ்.டி) இப்போது வாங்கும் எல்லாப்பொருளுக்கும் வரி+பொருள் விலை அதிகம் .ஃபொடொஸ்டேட் கூட வரி பணம் கட்ட வேண்டி இருக்கு. 1 தாளின் விலை 0.06 காசு.இந்நிலை மாறினால் என் தமிழனிடம் கொஞ்சம் காசு இருக்கும். காரணம் அவன் எப்போதும் ஏழ்மையில் உள்ளவன்.