வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்து அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நன்கொடை பெறுவதைத் தடுக்க வேண்டும், அரசாங்கக் குத்தகைகளைப் பெறும் நிறுவனங்கள் எந்த வகை அரசியல் பங்களிப்பையும் செய்வதையும் தடை செய்ய வேண்டும்.
அரசியல் நிதியளிப்பு மீதான தேசிய ஆலோசனைக் குழு அதன் அரசியல் நிதியளிப்பு அறிக்கையில் முன்வைத்துள்ள 32 பரிந்துரைகளில் இவையும் உள்ளிட்டிருந்தன.
குழுத் தலைவரும் பிரதமர்துறை அமைச்சருமான பால் லவ் இன்று காலை கோலாலும்பூரில் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
“வெளிநாட்டுத் தரப்புகள்” என்பது மலேசியாவில் வசிக்காத தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், அறநிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவையும் பதிவுபெற்ற பதிவுபெறாத மற்ற அமைப்புகளையும் குறிக்கும்.