முதல் முறையாக இன்று தெலுக் இந்தானில் பெர்சே ஆதரவாளர்களுக்கும் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சிவப்புச் சட்டை தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் பெர்சே ஆதரவாளர்களிடமிருந்து ஒரு கொடியைப் பிடுங்க எத்தனித்த போது இம்மோதல் ஏற்பட்டது.
லுமுட்டிலிருந்து தெலுக் இந்தானை நோக்கிச் சென்று கொண்டிருந்த பெர்சே ஆதரவாளர்களை ஜமால் தலைமையிலான ஒரு சிவப்புச் சட்டை கூட்டத்தினர் இடைமறித்தனர்.
ஜமாலிடம் தங்களுக்கு வழிவிடும்படி பெர்சே ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டிருக்கையில் ஜமால் திடீரென்று ஒரு பெர்சே ஆதரவாளரிடமிருந்த ஒரு கொடியைப் பிடிங்கிக் கொண்டு அவரை குத்தியதால் அங்கு ஒரு சிறிய சண்டை ஏற்பட்டது.
இச்சம்பவம் லுமுட்டிலிருந்து புறப்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் சந்தித்த இரண்டாவதுதாகும். மோட்டார்சைக்களில் வந்த 30 லிருந்து 40 வரையிலான சிவப்புச் சட்டையினர் பெர்சேயினருக்கு தொந்தரவு கொடுத்தனர். அவர்கள் பெர்சேயினரின் கொடிகளைப் பிடுங்குவது, கார்களை உதைப்பது மற்றும் கார்களின் வெளிப்பக்க கண்ணாடிகளை குத்துவது போன்றவற்றில் ஈடுபட்டனர்.
எல்லாமே ஏன் நடக்கிறது என்று தெரியாதா? மலாய்க்காரர் அல்லாதவரை அடிக்கி ஆளவே எல்லாம். இதெல்லாம் காக்காத்திமிர் ஆரம்பித்த கைங்கரியம். இப்போது பேயாட்டம் போடுகிறது.
அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே