ஹராபான்: தொகுதி எல்லைச் சீரமைப்பு தொடர்பில் இசிமீது வழக்கு தொடுப்பது உறுதி

nurulதேர்தல்   ஆணையம்   பரிந்துரைத்துள்ள   தேர்தல்    தொகுதி  எல்லைச்   சீரமைப்புக்கு   எதிராக   பக்கத்தான்  ஹராபான்   வழக்கு   தொடுக்கப்போவதாக    பிகேஆர்     உதவித்     தலைவர்   நூருல்   இஸ்ஸா   அன்வார்   கூறினார்.

“தொகுதி  எல்லைச்  சீரமைப்பை   எதிர்ப்பது   மட்டுமல்ல    இசிக்கு   எதிராக     வழக்கும்   தொடுக்கப்   போகிறோம்”,  என்றாரவர்.

நூருல்,     நேற்றிரவு    கூட்டரசு  பிரதேச   பார்டி   அமனா  நெகாராவின்  முதலாமாண்டு   நிறைவு  விழாவில்     கலந்துகொண்டு    பேசினார்.

தேர்தல்   தொகுதி  எல்லைச்  சீரமைப்பு    பிஎன்,    நாடாளுமன்றத்தில்    மூன்றில்   இரண்டு    பங்கு    பெரும்பான்மை   பெற   வழிகோலும்   என்றாரவர்.

“இதைச்  சொல்லி   வீணே  பயம்   காட்ட   வேண்டாம்   என்கிறார்கள்.

“பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    (தேசிய  பாதுகாப்புச்   சட்டத்தைக்  கொண்டு)   பேரரசரின்   அதிகாரத்தையே   கையகப்படுத்திக்   கொண்டிருக்கும்போது    பிஎன்னுக்கு     மூன்றில்  இரண்டு    பங்கு    வெற்றி   கிடைத்தால்    என்ன    ஆகும்,    எண்ணிப்   பாருங்கள்”,  என்றவர்   சொன்னார்.