அப்துல் கனி பட்டேல் சட்டத்துறைத் தலைவராக இருந்தபோது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்து அவரது கணக்கில் இருந்த பணம் பற்றி விசாரித்ததாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.
குறிப்பாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) விசாரணைக்கு உட்பட்டிருந்த ரிம42மில்லியன் பற்றி விசாரித்தாராம்.
“பிரதமரைச் சந்தித்த சட்டத்துறை தலைவர் அப்பணம் அவரது கணக்கில் இருப்பது எம்ஏசிசிக்குத் தெரியவந்திருப்பதாகக் கூறினார்.
“பிரதமரிடம் அப்படிச் சொன்னதும் ‘இல்லை, அப்படி எதுவும் இல்லை’ என மறுத்துள்ளார்.
“கனி பட்டேல் ‘அது உங்கள் கணக்கில்தான் இருக்கிறது’ என்று சொல்ல மீண்டும் ‘இல்லை’ என்று மறுத்தார்.
“பணம் அங்குதான் இருந்தது, அதை அவர் செலவு செய்து விட்டார்”. கெமாமானில் பாஸ் செராமா ஒன்றில் கலந்துகொண்ட முகைதின் இவ்வாறு கூறினார்.
அம்னோ கூடாரத்தில் இருந்தபோது இந்த முகைதீன், வாயை மூடிக் கொண்டிருந்தார். இப்போது வாயை பிளக்கிறார். இந்த ‘மலாய்க்காரர்’ முகைதீன் வாயில், அல்தான்துயா நஜிப், ‘கனமாக’ எதையாவது தள்ளினாள், வாயை மூடிக்கொள்வார். .
உங்களுக்கா நடிப்பு சொல்லிக்கொடுக்க முடியும்- நம்பிக்கை நாயகன் மட்டும் அல்ல நடிப்பு நாயகனும் கூட– உன்னையும் சேர்த்துதான்.
‘ முகைதின்: எஸ்ஆர்சி பணம் தம் வங்கிக் கணக்கில் இருப்பதை அறியாதவர்போல் நடித்தார் பிரதமர்’ என்று கூறும் முகைதீன் அவர்களே, நீங்களும் தெரிந்தும் தெரியாதவர் போல் நடித்தீர்களே, அப்பொழுது என்ன ஆச்சி எங்கு போச்சி உங்கள் ‘நல்லவன்’ ?