சாபாவில் மாநிலத் தலைவர் லாஜிம் உகினும் மற்றவர்களும் புதிய கட்சி ஒன்றை அமைப்பதற்காக கட்சியிலிருந்து விலகிக் கொண்டிருப்பது வருத்தமளிப்பதாக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர்களோ நாடாளுமன்ற உறுப்ப்பினர்களோ எந்தக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அந்தக் கட்சியைக் கைவிடுவது ஏற்கத்தக்கதல்ல என்றாரவர்.
ஆனாலும், பிஎன்னுக்கு எதிரான போராட்டத்தில் சாபாவை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியை அமைக்கும் லாஜிமின் நோக்கத்தைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று வான் அசிசா கூறினார்.
“எது எப்படியாயினும் சாபாவிலும் மற்ற இடங்களிலும் பிஎன்னுக்கு எதிரான தரப்புகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் சக்தியாக பிகேஆரை முன்னிறுத்த உறுதி பூண்டுள்ளேன்”, என்றாரவர்.