கடந்த சனிக்கிழமை பெர்சே 5 இன் வாகன அணியை தாக்குவதற்கு சிவப்புச் சட்டையினரை அனுமதித்ததற்காக மனித உரிமைகள் வழக்குரைஞர் எரிக் பால்சன் அரசாங்கத்தை சாடினார்.
அமைதியான பெர்சே 5 வாகன அணிக்கு தொல்லை கொடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் சிவப்புச் சட்டையினர் பங்கேற்றனர் என்று அவர் கூறினார்.
பெர்சேயுடன் சிவப்புச் சட்டையினரை ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று கூறிய எரிக், சமுதாய சட்டத்திற்குட்பட்ட தன்னுரிமை விவகாரத்தில் போக்கிரிகளை அதிகாரம் செய்ய அனுமதிப்பது அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு அது ஆற்ற வேண்டிய கடமையை கைவிட்டதாகும் என்றார்.
சிவப்புச் சட்டையினர் அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை வேறாகவும் அமதியாகவும் நடத்த விரும்பினால், தாராளமாகச் செய்யட்டும். மற்றவர்களின் நிகழ்ச்சியில் தொல்லை கொடுக்கக் கூடாது என்று அவர் இன்று டிவிட் செய்துள்ளார்.
சிவப்புச் சட்டைகள் பற்றி அம்னோவின் உச்சமன்றம் விவாதிக்கவோ முடிவெடுக்கவே இல்லை. ஆகையால், அம்னோ சிவப்புச் சட்டையினரை நேரடியாக ஆதரிக்கிறது என்று கூறுவது சரியல்ல என்று அம்னோவின் தகவல் பிரிவு தலைவர் அனுவார் மூசார் கூறினார்.
அதே வேளையில், அம்னோவின் உறுப்பினர்கள் எவரும் எந்த ஒரு பிரச்சனை பற்றியும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவதிலிருந்து அவர்களை அம்னோ தடுக்க முடியாது என்றும் கூறினார்.