ஞாயிற்றுக்கிழமை கார் பந்தயத்தின் போது மலேசியக் கொடியை உள்ளாடையாக அணிந்து அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக கைதான ஒன்பது ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவரின் ஆலோசகராம் .
ஜேக் வாக்கர், அமைச்சர் கிறிஸ்டபர் பைனுக்கு தற்காப்புப் புத்தாக்க ஆலோசகராக பணியாற்றுகிறார். மலேசிய கிராண்ட் பிரி பந்தயத்தில் ஆஸ்திரேலியர் டேனியல் ரிச்சார்டோ வெற்றி பெற்றதும் ஆடைகளைக் கலைந்துவிட்டு கொண்டாட்டத்தில் மூழ்கிய ஆஸ்திரேலியர்களின் கூட்டத்தில் அவரும் இருந்தார்.
இவ்விவகாரத்தை இப்போது ஆஸ்திரேலிய தூதரகம் கவனிப்பதாக பைனின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
“தெளிவான விவரங்களின்றி அது பற்றி மேலும் விவரிப்பது நல்லதல்ல”, என்றாரவர்.
சம்பவம் நடந்தபோது அந்த 9 பேரும் குடிபோதையில் இருந்ததாக மலேசிய போலீஸ் தெரிவித்தது. பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் மலேசிய கொடியை அவமதித்ததற்காகவும் அவர்கள்மீது குற்றம் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நாட்டு பற்று என்ற பெயரில் வெளியாடைகளாக மலேசிய கொடியை அணிவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தால், மலேசிய கொடி உள்ளாடைகளாக மாற வாய்ப்பிருந்திருக்காது.
அருமையான கருத்து ஸ்ரீகர முதல்வன் அவர்களே. தவறு நம்முடையது பிறறை நோவது ஏனோ?