சாபா எதிரணித் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேற பணம் கொடுக்கப்பட்டதா? மறுக்கிறார் எம்பி

mpமுன்னாள்   அம்னோ   உதவித்    தலைவர்   ஷாபி  அப்டால்        எதிர்க்கட்சித்    தலைவர்கள்    அவர்களின்   கட்சியை  விட்டு   வெளியேற   பணத்தை   வாரி  இறைத்தார்    என்று   கூறப்படுவதை      பெனாம்பாங்   எம்பி    டேரல்   லெய்கிங்   மறுக்கிறார்.

எதிரணித்   தலைவர்களுக்குப்   பணம்   கொடுப்பட்டதாக   சரவாக்   டிஏபி   தலைவர்    சோங்    சியாங்   ஜென்    நேற்று   குற்றஞ்சாட்டி  இருந்தார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட   பிரதிநிதிகள்     எவருக்கும்   பணமோ   பொருளோ  கொடுக்கப்படவில்லை   என்பது   எனக்குத்    தெரியும்.  அவர்கள்   சாபாவில்   அமையவுள்ள    ஒரு   பல்லினக்  கட்சியில்    சேர்வதற்குத்   தாமே  முன்வந்தார்கள்”,  என்று   லெய்கிங்   கூறினார்.

பிஎன்னை  எதிர்க்கும்    தங்களின்   போராட்டத்திலும்    கொள்கைகளிலும்    எந்த   மாற்றமுமில்லை   என்று   கூறிய   லெய்கிங்,    சொல்லப்போனால்,   அது   முன்னைவிட    வேகம்   பெற்றுள்ளது    என்றார்.

சாபாவில்   அமையும்    கட்சிக்கு   சாபா  வாக்காளர்களுக்கு  மட்டுமே  பதில்  சொல்ல    வேண்டிய  பொறுப்பு  இருக்கும்.  சாபாவுக்கு   வெளியில்  உள்ளவர்களின்     கருத்துக்கு   அது   கவனம்   செலுத்த   வேண்டிய   அவசியமிருக்காது    என  ஷாபியின்  கட்சியில்   சேர்வதற்காகவே  கடந்த   மாதம்    பிகேஆரிலிருந்து  வெளியேறிய  லெய்கிங்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.