இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியும் அவரின் முக்கிய உதவியாளர்கள் மூவரும் விஷ உணவருந்தி கவலைகிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஈராக், நினவே பெ’ஆஜ் மாவட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவில் நஞ்சு கலந்திருந்ததாக பிரஸ்ட் டிரஸ்ட் அப் இந்தியா (பிடிஐ) கூறியது.
அந்நால்வரும் விஷத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையான பாதுகாப்புடன் இரகசியமான ஓர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஈராக்கிய செய்தி நிறுவனமான டபல்யுஏஏ கூறியது.
விஷ உணவுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய ஐஎஸ் பலரைக் கைது செய்து விசாரித்து வருகிறது.
பக்தாதி ஏற்கனவே பல தடவை காயமடைந்துள்ளார். அவரின் தலைக்கு யுஎஸ்$10 மில்லியன் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.