குத்தகை வழங்கியதில் அதிகாரத்தைமீறி நடந்து கொண்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கோத்தா கினாபாலுவில் அரசாங்க உயர் அதிகாரிகள் இருவர் இன்று கைதானார்கள்.
அவர்களைக் கைது செய்த மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரிகள் அவர்களில் ஒருவரின் இரும்புப் பெட்டகத்திலிருந்து ரிம3 மில்லியனையும் கைப்பற்றினர்.
51, 54 வயது நிரம்பிய அவ்விருவரும் அவர்களின் அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார்கள்.
ஒரு அரசாங்கத் துறை இயக்குனரும் துணை இயக்குனருமான அவ்விருவரும் அவர்களின் துறைசார்ந்த குத்தகைகளை அவர்களின் உறவினர்களுக்கு வழங்குவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள் என எம்ஏசிசி வட்டாரமொன்று கூறிற்று.
“அவர்களின் துறை 2010-இலிருந்து ரிம3.3 பில்லியனுக்குமேல் பெறுமதியுள்ள உள்கட்டுமானத் திட்டங்களுக்கான குத்தகைகளை வழங்கியுள்ளது. அவர்கள் குத்தகைகளை அவர்களின் உறவினர்களுக்கே கொடுத்து வந்தனர்”, என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.
இந்த அதிகாரமீறல் 2010-இல் தொடங்கி நடந்து வந்திருக்கிறது என்றும் அவ்விருவரும் ரிம50 மில்லியனுக்குமேல் சொத்து சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பசு தோல் போற்றிய புலிகள் $$$$$$$$$