மரியா: ஜமால், மன்னிப்பு கேள், இல்லையேல் சட்ட நடவடிக்கை

 

jamalapologizeபெர்சேயின் தலைவர் மரியா சின் அப்துல்லா சிவப்புச் சட்டைகளின் தலைவரும் சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவருமான ஜமால் முகமட் யுனுஸுக்கு அனுப்பியுள்ள வழக்கறிஞர் கடிதத்தில் மன்னிப்பு கோருமாறு அவருக்கு 48 மணி நேர அவகாசம் அளித்துள்ளார். மன்னிப்பு கோரத் தவறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜாமாலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜமால் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) கூட்டத்தினர் பெர்சேயில் ஊடுறுவியுள்ளனர் என்றும் அது கேஎல்ஐஎ1, கேஎல்ஐஎ2 மற்றும் பிரதமரின் இலாகாவை சுற்றிவளைத்து அரசாங்கத்தை வீழ்த்தும் என்றும் கூறியிருந்தார்.

இக்கூற்று முற்றிலும் பொய்யானது, தீங்கானது மற்றும் அவதூறானது என்று மரியாவை பிரதிநிதிக்கும் டைம் & காமினி வழக்குரைஞர் நிறுவனத்தின் வழக்குரைஞர் மெலிசா சசிதரன் கூறினார்.

ஜமாலுக்கு அனுப்பட்டுள்ள இரண்டு பக்க கடிதத்தில் அவர் கூறியிருந்ததை முழுமையாக திரும்பப் பெற்றுக்கொண்டு மரியாவிடம் மன்னிப்பு கோர வேண்டும். மேலும், இது போன்ற அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதில்லை என்ற உத்தரவாதத்தை அவர் எழுத்து  மூலம் அளிக்க வேண்டும் என்றும் அக்கடிகத்தில் கோரப்பட்டுள்ளது.