உலக வங்கி: 2017-இல் மலேசியப் பொருளாதாரம் மீண்டும் துள்ளல் நடை போடும்

shetty2017,  2018-இல்   எண்ணெய்  விலைகளும்    ஏற்றுதிமதிகளும்   உயர்வதைத்    தொடர்ந்து   மலேசிய   பொருளாதார   வளர்ச்சியும்    மீட்சிபெறும்    என   எதிர்பார்க்கப்படுவதாக    கிழக்கு     ஆசியா,  பசிபிக்   வட்டார    தலைமை   பொருளாதார  அதிகாரி    சுதிர்    ஷெட்டி    கூறினார்.

கடந்த    ஆண்டில்   5 விழுக்காடாக   இருந்த    மலேசிய   பொருளாதார    வளர்ச்சி   விகிதம்    2016-இல்  4.2  விழுக்காட்டுக்குக்   குறையலாம்.  உலக    அளவில்    எண்ணெய்க்கும்   தயாரிப்புப்  பொருள்களுக்குமான   தேவை   குறைந்திருப்பதே   இதற்குக்   காரணம்   என   ஷெட்டி   தெரிவித்தார்.

“மீட்சிபெறும்   போக்கு   இப்போதே   தெரிகிறது”,  என்றாரவர்.  ஷெட்டி   வாஷிங்டனிலிருந்து   கோலாலும்பூரில்   நடைபெற்ற    காணொளிக்  கருத்தரங்கு    ஒன்றில்   கலந்துகொண்டார்.