ஆயர் பானாசில் புகை கையெறிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன

grenadeநேற்று,   கோலாலும்பூர்    ஸ்தாபாக்  பிபிஆர்   அடுக்குமாடி   வீடுகளின்  குப்பைத்   தொட்டியில்   புகை   கக்கும்   இரண்டு  கையெறிக்  குண்டுகளை   போலீசார்    கண்டெடுத்தனர்.     அவை  வெள்ளை  பிளாஸ்டிக்   தாளில்   சுற்றப்பட்டு  குப்பைத்   தொட்டியில்   போடப்பட்டிருந்தன.

நேற்று     பிற்பகல்   3.30-க்கு    போலீசார்     குற்றச்செயல்களுக்கு   எதிராக   ‘Op Cegah Jenayah’  நடவடிக்கையை   மேற்கொண்டிருந்தபோது   அக்  கையெறிக்  குண்டுகளைக்   கண்டெடுத்தனர்.

அவை,  போலீசாரும்   கூட்டரசு  சேமப்   படையினரும்   பயன்படுத்தும்    கையெறிக்  குண்டுகள்   என   கோலாலும்பூர்    போலீஸ்    தலைவர்   அமர் சிங்   கூறினார்.  ஆயுதப்  படையினரும்கூட   அவற்றைப்  பயன்படுத்தக்கூடும்  என்றாரவர்.

இரண்டு  கையெறிக்  குண்டுகளிலும்    ஏழு ரேகைகள்   பதிவாகி  இருப்பதாகவும்    அவர்   சொன்னார்.

அவை  பத்து   ஆராங்   தொழிற்சாலை  ஒன்றிலிருந்து  வெளிவந்தவை    என்று  அமர்   சிங்  தெரிவித்தார்.    அவை   போலீசுக்குக்  கொடுக்கப்பட்டவையா     ஆயுதப்  படைகளுக்குக்  கொடுக்கப்பட்டவையா     அல்லது  வேறு   யாருக்கேனும்   விற்கப்பட்டவையா  என்பது   இப்போது   ஆராயப்பட்டு     வருகிறது.