பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) இடைக்காலத் தலைவர் முகைதின் யாசின் ஒரு வழக்குக்காக இன்று கோலாலும்பூர் உயர் நீதி மன்றம் வந்திருந்த பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிமைச் சென்று கண்டார்.
நீதிமன்றத்தில் சாட்சிகளுக்கான அறையில் 30 நிமிடம் அன்வாருடன் முகைதின் பேசினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் அச்சந்திப்பு குறித்து விசாரித்தபோது அன்வாருக்குத் தார்மீக ஆதரவு அளிக்க வந்திருப்பதாக முகைதின் தெரிவித்தார்.
அன்வாருடன் அவர் என்ன பேசினார் என்பதைத் தெரிவிக்கவில்லை.
பெர்சத்து 14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபானுடன் ஒத்துழைத்து பிஎன்னைக் கவிழ்க்க நோக்கம் கொண்டிருப்பதால் அன்வாருடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றாரவர்.