பாஸுடன் ஒத்துழைக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் முதலில் டிஏபி-யுடன் அவற்றுக்குள்ள தொடர்புகளை அறுத்தெறிய வேண்டும் என்கிறார் பாஸ் கட்சியின் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான்.
“டிஏபி இன்னமும் பாஸின் இஸ்லாமிய போராட்டத்தை எதிர்க்கிறது
“அதனால், டிஏபியையும் அதனுடன் ஒத்துழைக்கும் கட்சிகளையும் நிராகரிப்பதே பாஸின் நடப்புக் கொள்கையாகும்”, என்றவர் கூறியதாக ஹராகா டெய்லி அறிவிக்கிறது.
நேற்று, முன்னாள் எதிரணித் தலைவரான அன்வார் இப்ராகிம் பக்கத்தான் ஹராபானும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவும் பாஸுடன் பேச்சுகள் நடத்தப்போவதாகக் கூறியிருந்தார்.
இதனிடையே, பாஸுக்கு விரிவான அரசியல் அனுபவம் உண்டு என்பதால் மற்ற கட்சிகளின் துணையின்றி அது தனித்து நின்றே சவால்களைச் சமாளிக்க இயலும் என்று நஸ்ருடின் கூறினார்.
பாஸின் திருகு தாளங்கள் அடங்காது !