பிலிப்பீன்சிலும் சிங்கப்பூரிலும் புதிதாக சிலருக்கு ஸிக்கா நோய் கண்டிருக்கிறது

zikzநேற்று      பிலிப்பீன்ஸ்    அரசாங்கம்,    பிலிப்பீன்சில்    புதிதாக   மூவருக்கு   ஸிக்கா   நோய்  கண்டிருப்பதாக    அறிவித்தது.    அந்நாட்டில்  அவர்களையும்   சேர்த்து   இவ்வாண்டில்   மொத்தம்    15    பேர்   அந்நோயால்   பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மத்திய   பிலிப்பீன்சின்   இலோய்லோ    நகரிலும்   அண்டிபோலோ    நகரிலும்    மூன்று   பெண்களுக்கு    அந்நோய்    கண்டிருப்பதாக     பிலிப்பின்    சுகாதார    அமைச்சர்   போலின்   உபியால்   தெரிவித்தார்     என  வியட்நாம்  செய்தி  நிறுவனம்   அறிவித்தது.

பிலிப்பீன்சில்  262    பேருக்கு   அந்நோய்  கண்டிருக்கலாம்  என்று    சந்தேகிக்கப்பட்டு   ஆராய்ந்ததில்   15  பேருக்கு    அந்நோய்   கண்டிருப்பது   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது     என்று    அமைச்சர்   கூறினார்.

இதனிடையே,  சிங்கப்பூரில்    புதன்கிழமை    புதிதாக   சிலருக்கு    ஸிக்கா  நோய்   தொற்றிக்கொண்டிருப்பது    தெரிய    வந்ததை   அடுத்து    அங்கு   அந்நோயால்    பாதிக்கப்பட்டோர்   எண்ணிக்கை   400-ஐத்   தாண்டியுள்ளது   என    தேசிய    சுற்றுச்சூழல்   நிறுவனம்  கூறிற்று.

பாதிக்கப்பட்டோரில்   16 பேர்   கர்ப்பிணி   பெண்கள்   என்று    அறிவிக்கப்பட்டதைத்   தொடர்ந்து     சுகாதார   அமைச்சு   அவர்களை    அணுக்கமாகக்   கண்காணித்து   வருகிறது.

சிங்கப்பூரில்  2011க்கும்  2014க்குமிடையே    செய்யப்பட்ட   ஆய்வில்   10,000  சிசுக்களில்    ஐந்திலிருந்து   12பேர்வரை   தலைசிறுத்துப்   பிறப்பது    தெரியவந்துள்ளது.

ஆனால்,  ஸிக்கா   நோயின்    காரணமாக    யாரும்  தலைசிறுத்துப்  பிறந்திருப்பதாக     தெரியவில்லை.