நிலைத்து நிற்கக்கூடிய ஒரு கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் அனைத்தும், பாஸ், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து), பக்கத்தான் ஹராபான் பங்காளிக் கட்சிகள் எல்லாமே கூடிப் பேச வேண்டும் என அனாவார் இப்ராகிம் கூறினார்.
“சம்பந்தப்பட்ட கட்சிகள் அனைத்தும் கலந்து பேசத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் தொடக்கம்”, என்றாரவர்.
“பக்கத்தான் ஹராபான், டிஏபி, அமனா, பெர்சத்து எல்லாமே பாஸுடன் கலந்துரையாட வேண்டும்”.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபியும் பாஸும் ஒன்றினைந்து பணியாற்றுவது சாத்தியமா என்று வினவப்பட்டதற்கு அன்வார் இவ்வாறு கூறினார்.
14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வலுவான எதிரணி தேவை என்பதை அன்வார் வலியுறுத்தினார்.
“தொடர்ந்து பேச வேண்டும். நிறுத்தக் கூடாது.
“எதிரணி ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை”, என்றார்.