பிளவுபட்டுக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது அச்சம்தரும் ஒரு மிகப் பெரிய பணி. ஆனாலும் அப்பணியை ஏற்கச் சித்தமாகவுள்ளார் முகைதின் யாசின். அதில் தோல்வி ஏற்பட்டாலும் அதற்கும் அவர் தயார்தான்.
“தோல்வி அடையுமோ என்ற கவலையெல்லாம் கிடையாது. முயற்சியே செய்யாமல் இருப்பதைவிட முயன்று பார்த்து அதில் தோல்வி கிடைத்தாலும் சரிதான்”, என பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவர் சினார் ஹரியானிடம் நேற்று கூறினார்.
“எனக்கு இது ஒரு சவால். ஒரு அரசியல் கட்சியான பெர்சத்து என்னைப் பாலமாகக் கொண்டு (எதிர்க்கட்சிக்களுக்கிடையே) இணைப்பை ஏற்படுத்த முனைவது எனக்கு சம்மதமே”, என்றாரவர்.
மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள். அதுதான் பெர்சத்து வழியாக தம் அரசியல் போராட்டத்தைத் தொடர ஒரு உந்து சக்தியாக உள்ளது என முன்னாள் துணைப் பிரதமர் கூறினார்.
“இப்போது நான் செய்வதை என் 45 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் கனவுகூட கண்டதில்லை. எல்லாமே மலேசியாவைக் காப்பாற்றத்தான்”, என்று முகைதின் கூறினார்.
முஹைதீன் பெர்சேவில் களம் இறங்குவாரா? முஹைதீன் மகாதீர் கூட்டணி புதிய கட்சி இந்தியர்களை எங்கு நிறுத்தும் ? இப்போது அரசியல் இந்துமாக்கடலின் உச்சியில் நின்று பல திமிலங்கள் பல்லிளிக்க நத்தைகளாக தமிழா இந்தியன் யாருக்கு ஆட்டா மாவு
ஆட்டுவது ?