அம்னோ அச்சுறுத்தல் இருப்பினும் பினாங்கு பெர்சே வாகன அணி நடத்தப்படும்

 

PenagBersihஅம்னோ இளைஞர் பிரிவும் அதன் சிவப்புச் சட்டை கூட்டத்தினரும் மருட்டல்கள் விடுத்துள்ள போதிலும், பினாங்கில் பெர்சே வாகன அணி திட்டமிட்டபடி சனிக்கிழமை நடைபெறும் என்று பெர்சே சூளுரைத்துள்ளது.

அம்னோ மாநில இளைஞர் பிரிவு தலைவர் ரஃபிஷால் அப்துல் ரஹிம்
கடந்த சனிக்கிழை நடைபெற்ற ஒரு பேரணியில் போலீசார் தலையிட்டு பெர்சேயை தடுத்து நிறுத்தாவிட்டால் அவரது கூட்டத்தினர் பெர்சேயிக்கு எதிராக போராட்டம் நடத்துவர் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து பெர்சே மேற்கண்டவாறு கூறிற்று.

தங்களுடைய கோரிக்களையும் அணுகுமுறைகளையும் விரும்பாதவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கலாம், கலந்துறையாடல் நடத்தலாம், ஏன், தங்களுடன் விவாதம்கூட நடத்தலாம் என்று பினாங்கு பெர்சே ஒருங்கிணப்பாளர் தோ கின் வூன் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இந்தப் பண்பாட்டை நாங்கள் விருத்தி செய்ய விரும்புகிறோம். மாறுபட்ட கருத்தை கூறுவதற்கான மக்களின் உரிமையை நாம் மதிக்கPenagBersih1 வேண்டும்”, என்று தோ கூறினார்.

பெர்லிஸ் மற்றும் கெடா வாகன அணியின் பெர்சே தீபம் எதிர்வரும் சனிக்கிழமை பினாங்கு பெர்சே வாகன அணியிடம் இன்னும் பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் ஒப்படைக்கப்படும்.

பார்ட்டி அமனா நெகாராவின் பொதுநல பிரிவைச் சேர்ந்த அரிப் அக்கட்சி 200 உறுப்பினர்களை சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் என்றார்.

சினமூட்டும் சம்பவங்களையும் திருப்பித் தாக்குதல் போன்றவற்றையும் தாங்கள் தடுக்க விரும்புவதாகவும், பெர்சேயின் நடவடிக்கைகள் போர்க்களமாக மாறாமல் இருக்க வேண்டும் என்றாரவர்.

பினாங்கு பெர்சே வாகன அணி நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக்கு அரிப் பொறுப்பேற்றுள்ளார். எவ்வித சினமூட்டும் சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.

“போலீசார் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பெர்சே நிகழ்ச்சிகளில் இவ்வாறான பிரச்சனைகள் இருந்ததே இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.