மாரிஷியஸில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் உடைந்த பகுதி ஒன்று மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தினுடையதுதான் என்று மலேசியா இன்று அறிவித்தது.
அந்த போயிங் 777, 2014 மார்சில், 239 பேருடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் பறந்து கொண்டிருந்தபோது காணாமல்போனது. இரண்டாண்டுகள் ஆகியும் அது விழுந்த இடத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த உடைந்த பகுதி விமானத்தின் இறக்கைப் பகுதியை ஒத்திருக்கிறது என ஆஸ்திரேய போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு கூறியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் லியோங் தியோங் லாய் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஏற்கனவே இரண்டு உடைந்த பகுதிகள் பிரெஞ்ச் தீவான ரீயூனியனிலும் தான்சானியாவுக்கு அப்பால் உள்ள பெம்பா தீவிலும் கண்டெடுக்கப்பட்டு அவை காணாமல்போன விமானத்தினுடையவைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-ராய்ட்டர்ஸ்