சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு நாளை பெர்சே சிலாங்கூரில் நுழைந்தால் அதனை எதிர்கொள்ளப் போவதாக சூளுரைத்துள்ளது.
நாளை சிலாங்கூர் ராஜா மூடா முடி சூடவிருப்பதால் அதை மதிக்காமல் பெர்சே அதன் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் அது அவமதிப்பதாகும் என்று அம்னோ இளைஞர் செயற்குழு உறுப்பினர் அர்மாண்ட் அஸ்ஹா அபு ஹனிப் கூறினார்.
அவர்கள் எல்லையைத் தாண்டி நமது இளவரசரின் பிரகடனத்தை மதிக்கவிட்டால், நாங்கள் ஒன்றுதிரண்டு அந்த முட்டாள் கூட்டத்தினர் அவர்களின் நடவடிக்கைகளை சிலாங்கூரில் தொடர்வதிலிருந்து தடுப்போம் என்றாரவர்.
“போதும், பெர்சே! நாங்கள் உங்களை நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களிலும் – சபாக் பெர்ணம், சுங்கை பெசார் மற்றும் தஞ்சோங் காராங் – சந்திப்போம். நாங்கள் உங்களுக்காக அங்கே காத்திருப்போம்”, என்று அர்மாண்ட் இன்று ஷா அலாமில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
வணக்கம். சிலாங்கூர் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? உள்ளே வராதே என்பதற்கு.
முதலில் நாட்டுக்கு நல்ல திறமையான, அனுபவம் வாய்ந்த, சட்டம் அறிந்த, சட்டம் தெரிந்த போலீஸ் படை வேண்டும், அதன் பிறகே நாடு சகல விதத்திலும் சுகம் காணும், தற்போது உள்ள போலீஸ் படை தலைவரை மாற்றும் வரை நாட்டில் அமைதி இருக்காது .
பேரணியை வேறு ஒரு நாளைக்கு மாற்றுவதுதான் விவேகமான செயல்…. செய்வார்களா BERSIH அணியினர் ???
இவனைப்போன்ற ஈனங்கள் சுலபமான வகையில் எப்படி பணக்காரன் ஆவது என்று தெரிந்து வைத்துள்ளன– இன-மத துவேஷம் வழி எவ்வளவோ சம்பாதிக்கலாம்- பதவி – பணம்-இன்னும் -இவனின் தலைவன் பாதையில் தானே இவனும் செல்கிறான்.