லங்காட், செராஸ் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் நேற்றிரவு மூடப்பட்டன

waterநீர் துர்நாற்றம்  காரணமாக   லங்காட்,  செராஸ்  நீர்  சுத்திகரிப்பு  ஆலைகள்   மூடப்பட்டன

செமந்தான்    ஆற்று   நீரில்   துர்நாற்றம்  அடிப்பதாக    ஐயுறப்படுவதால்   நேற்றிரவு  8.30க்கும்   10  மணிக்கும்  அவை    மூடப்பட்டதாக    சிலாங்கூர்   சுற்றுலா,   சுற்றுச்சூழல்,  பசுமைத்   தொழில்நுட்பம்  மற்றும்   பயனீட்டாளர்   விவகாரங்களுக்குப்  பொறுப்பான    ஆட்சிக்குழு    உறுப்பினர்    எலிசபெத்   வொங்    கூறினார்.

பகாங்கின்  சுங்கை   செமந்தானிலிருந்து   ஆற்று   நீரைக்   கொண்டுவரும்   சுரங்கப்   பாதையில்     வழக்கத்துக்கு   மாறான    நாற்றம்  அடிப்பது   நேற்றிரவு   7.30க்குக்குத்     தெரிய   வந்ததாக      அவர்    சொன்னார்.

“பகாங்    நீரளிப்பு   நிறுவனத்தைத்    தொடர்புகொண்டு   தெரிவித்தோம்.  அவர்கள்    பகாங்    சுற்றுச்சூழல்    துறைக்குத்    தெரியப்படுத்தி  இருக்கிறார்கள்.

“தூய்மைக்கேட்டுக்கான   காரணத்தைக்   கண்டுபிடிப்பதற்கு    உதவ    கும்புலான்    ஆயர்   சிலாங்கூர்   கண்காணிப்புக்   குழுவும்   பகாங்   சென்றுள்ளது”,  என்றாரவர்.

நீர்  சுத்திகரிப்பு   ஆலைகள்   மூடப்பட்டதால்   கோலாலும்பூரிலும்   பெட்டாலிங்கிலும்   ஹுலு   லங்காட்டிலும்   சில    இடங்களில்    நீர்  விநியோகம்    தடைப்படும்   என    வோங்   கூறினார்.

அங்கெல்லாம்   தண்ணீர்தாங்கிகள்    மூலமாக   நீர்    அளிக்கப்படும்.