டாக்டர் மகாதிர் முகம்மட் , ஆட்சியாளர் மன்றத்துக்கு அம்மன்றம் அக்டோபர் 11-இல் அதன் கூட்டத்தை நடத்துவதற்குமுன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி விலகக் கோரும் குடிமக்கள் பிரகடனத்தை அனுப்பி வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர், பிரகடனத்துடன் செப்டம்பர் 9-இல் தாம் பேரரசரை கெடா, அலோர் ஸ்டார், இஸ்தானா அனாக் புக்கிட்டில் சந்தித்து பேசியதை விவரிக்கும் கடிதம் ஒன்றையும் இணைத்துள்ளார்.
“சந்திப்பு தொடர்பாக பேரரசரிடமிருந்து இதுவரை மறுமொழி எதுவும் இல்லை.
“எனவே, மன்றம் அக்டோபர் 11-இல் கூடுவதால், ஆட்சியாளர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதுவது நல்லது என்று நினைத்தேன்.
“குடிமக்கள் பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பதை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக அப்படிச் செய்தேன்”, என சினார் ஹரியானிடம் மகாதிர் தெரிவித்தார்.
ஒன்றும் நடக்காது- ஆட்சியாளர்கள் உன் கட்டுப்பாட்டில் இல்லை காக்காத்திமிர். நம்பிக்கை நாயகனை நாடி சொகுசு வாழ்க்கை நடத்தும் போது அவனை எப்படி விலக கோர முடியும்?
ஒரு பழைய பாடல். இது மகாதிமிருக்கு மிகவும் பொருந்தும், ‘இதுவும் வேண்டுமடா, எனக்கு [உனக்கு] இன்னமும் வேண்டுமடா. எதையும் நன்றாய் எடை போடாமல் உதவி செய்தேனே [பதவி கொடுத்தேனே]. உறவு கொண்டேனே.கொத்தும் பாம்புடன் குடியிருந்தேனே, கொட்டும் தேள்தனை மடியில் வைத்தேனே. வெட்டும் கைகளை அனைத்திருந்தேனே. வெளுத்ததெல்லாம் பால் [ஊழல்] என்று நினைத்திருந்தேனே.’
சிங்கம், ஒரு வித்தியாசம்: வேண்டும் என்று தான் உதவி செய்தேன்! பதவி கொடுத்துத்தான் உறவு கொண்டேன்! நானே கொத்தும் பாம்பு! நானே கொட்டும் தேள்! நானே வெட்டும் கை! நானே கருத்த பால்! என்னையேவா?