சாபாக் பெர்ணத்தில் மஞ்சள்-நிறச் சட்டை அணிந்திருந்த பெர்சே பங்கேற்பாளர் ஒருவரிடம் சிகப்புச் சட்டையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருப்பதை பெர்சே கண்டித்தது.
“அவர்கள் அவரைக் கொன்றிருக்கக் கூடும். இப்படிப்பட்ட செயல்கள் குண்டர்தனத்தைக் காட்டுகின்றன. இவை குற்றச் செயல்கள், மோசமான வன்முறைகள்”, என பெர்சே இன்று ஓர் அறிக்கையில் சாடியது.
நேற்று பெர்சே வாகன அணிகள் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டபோது பல இடங்களில் அரசாங்க- ஆதரவு சிகப்புச் சட்டை இயக்கத்தினர் வாகன அணிகளை இடைமறித்து தொல்லை கொடுத்தார்கள்.
“குறிப்பாக பெர்சே ஆதரவாளர் ஒருவரை இந்தக் குண்டர் கும்பல் அடித்து உதைத்திருக்கிறது.
“அவரை மோட்டார் சைக்கிளிலிருந்து தள்ளி விட்டார்கள், உதைத்தார்கள், குத்தினார்கள். அதுவும் மிக மோசமாக . அதன் விளைவாக அவர் கடுமையாக காயமடைந்தார்”, என பெர்சே கூறிற்று.
சிகப்பு சட்டை அணிந்திருந்த மிருகங்கள் மீது எந்த தவறும் கிடையாது. சொறி நாய்களும், பகல் கொள்ளை ஓநாய்களும் மேய்ந்துகொண்டிருக்கும் சாலையருகே, மஞ்சள் சட்டை மனிதர்கள்[பெர்சே] சென்றது மாபெரும் தவறு.
அம்னோ குண்டர் கும்பல் என்று தெரியாதா என்ன?