முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இரண்டு வாரங்களுக்குமுன் லண்டனில் ஒரு கூட்டத்தில் பேசியபோது நாட்டின் பிரதமராவதற்கு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவர் முகைதினிடம் எல்லாத் தகுதியும் உண்டு என்று கூறியிருந்தார்.
ஆனால், புதன்கிழமை புத்ரா ஜெயாவில் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் முகைதின் அடுத்த பிரதமராவாரா என்று கேட்டதற்கு மகாதிர் வேறுவிதமாக பதிலளித்தார்.
“என்னைக் கேட்டால், ஆதரவு இருந்தால் அவரால் வழிநடத்த முடியும்”, என்று கூறியவர் உடனே நிறுத்தி, நிதானமாக “அதாவது கட்சியை” என்றார்.
“அவரால் அரசாங்கத்தை வழிநடத்த முடியுமா என்பது வேறு விசயம்”, என்றும் தொடர்ந்து கூறினார்.
இது லண்டனில் அவர் கூறியதற்கு முரணாக இருந்தது.
“பிரதமராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது (தேர்தலில் வென்ற பிறகு) கட்சிகள் ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டிய ஒன்று.
“யார் பிரதமராக வேண்டும் என்பதை நான் உரைப்பது முறையாகாது”, என்றார்.
எதிர்காலத் தலைவர்கள் பற்றிப் பேசும்போது, ஒருவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர்தான் அவருக்கு நாட்டை வழிநடத்தும் ஆற்றல் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியும் என்றும் மகாதிர் குறிப்பிட்டார். “நான் பல தடவை தவறான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன்” என்றும் அவர் சொன்னார்
நீரே அடுத்த பிரதமர் சாகும் வரை என்று சொல்லியிருக்கலாம் ! அல்லது , முக்ரிஸ் மகாதீர் பிரதமராகும் தகுதி உள்ளவர் என்று கூறி இருக்கலாம் !! எல்லாம் சுயநலம் தானே !!