சாபாவில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்- ஒழிப்பு நடவடிக்கை ஊழல் எந்த அளவுக்கு புற்றுநோய் போல் ஆளும் அரசாங்கத்தில் ஊடுருவியுள்ளது என்பதைக் காண்பிக்கிறது.
அவ்வளவு பெரிய தொகை சம்பந்தப்பட்ட ஊழல் உயர் தலைவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது என்று கூறப்படுவதை நம்ப முடியவில்லை என சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“சாபா நீரளிப்புத்துறை அதிகாரிகளால் ரிம200 மில்லியன் அளவுக்குப் பணம் கையாடல் செய்ய முடிகிறதென்றால் அது கூட்டரசு அரசாங்கத்தில் நிர்வாகமும் மேலாண்மையும் சீரழிந்து கிடப்பதைக் காட்டவில்லையா?”, என அன்வார் வினவினார்.
புத்ரா ஜெயாவிலிருந்து ரிம3.3 பில்லியன் மாநில அரசுக்குத் தெரியாமலேயே சாபா நீரளிப்புத்துறைக்கு வழங்கப்பட்டதாக அம்னோ அரசியல்வாதிகள் கூறிக்கொள்வது பல கேள்விகளை எழுப்புகிறது என்றாரவர்.
“சாபா அமைச்சருக்குத் தெரியாமல் அது எப்படி நடந்திருக்க முடியும்?”, என்று அன்வார் வினவினார்.