2015 -இல் பிரதமர் கணக்கில் ரிம3.4மில்லியன் போடப்பட்டது: சரவாக் ரிப்போர்ட்

report2015  பிப்ரவரி,  மார்ச்   மாதங்களில்  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கின்   அம்பேங்க்   கணக்குகளில்    மொத்தம்   ரிம3.4மில்லியன்   போடப்பட்டதாக   சரவாக   ரிப்போர்ட்    புதிதாக  ஒரு   குற்றச்சாட்டை   முன்வைத்துள்ளது.

அக்கணக்குகளை   எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்   சென். பெர்ஹாட்டின்   முன்னாள்   நிர்வாக   இயக்குனர்    நிக்  பைசல்   அரிப்  கமில்   கவனித்து    வந்தார்    என    அது  கூறிற்று.

பிரதமரின்   வங்கிக்  கணக்கறிக்கைகளைப்   பார்க்கையில்     பணத்தின்   பெரும்பகுதி    ரொக்கமாகவே   போடப்பட்டிருக்க    வேண்டும்   என்று    தெரிவதாக   சரவாக்  ரிப்போர்ட்    செய்தியாசிரியரும்    நஜிப்பை   ஆட்சியிலிருந்து    கவிழ்ப்பதற்குச்   சதி   செய்யும்   கூட்டதில்   ஒருவர்     என்று   குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருமான   கிளேய்ர்  ரியுகாசல்- பிரவுன்   கூறினார்.

சரவாக்  ரிப்போர்ட்   வங்கிக்  கணக்கறிக்கைகளையும்   வெளியிட்டிருந்தது.  அவற்றை    மலேசியாகினியால்   உறுதிப்படுத்திக்கொள்ள   முடியவில்லை.