தம்மை இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டவர் அல்லர் என்று அறிவிக்க வேண்டுமென்று ரோஸ்லிசா இப்ராகிம் தொடுத்த வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மறுவிசாரணைக்காக அவ்வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்புவதாகவும் வழக்கை முன்னர் விசாரித்த நீதிபதி அல்லாமல் வேறொருவரை வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அது கூறிற்று.
அவ்வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த காரணம் சரியல்ல என்று முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி ஆபாங் இஸ்கண்டர் ஆபாங் ஹஷிம் கூறினார்.
தன்னை முஸ்லிம் தந்தைக்கும் பெளத்தரான தாயாருக்கும் பிறந்த சட்டவிரோத பிள்ளை என்று கூறிக்கொள்ளும் ரோஸ்லிசா,35, தன் தாயார் ஒரு பெளத்தராகவே தன்னை வளர்த்ததாகவும் தந்தை தன் நலனில் என்றும் அக்கறை காட்டியதில்லை என்றும் கூறினார்.
தான் ஷியாரியா சட்டத்துக்கோ ஷியாரியா நீதிமன்றங்களுக்கோ உட்பட்டவர் அல்ல என்று அறிவிக்குமாறு அவர் கோருகிறார்.
இந்த நாட்டில் மத விவகாரத்தில் உங்களுக்கு நீதி கிடைக்குமா? உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுகள்.